ஆத்தாடி ஆத்தா… நமக்கு நம்ம வம்சம் முக்கியம்ல… யம்மா காய்கறி விக்கிறவங்களே.. இதுல ஒரு கிலோ போடுங்க..

முள்ளங்கி உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுகிறது.

 • முள்ளங்கியில் வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துகள் அதிகம் உள்ளது.
 • உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மஞ்சள் காமாலை வராமல் பாதுகாக்கிறது.
 • புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 • ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது.
 • கல்லீரலை பாதுகாக்கிறது.
 • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டது.
 • ரத்தம் மற்றும் ஜீரணப்பாதையை சுத்தப்படுத்துகிறது.
 • பசியை தூண்டும்.
 • மலச்சிக்கலை போக்குகிறது.
 • மஞ்சள் காமாலை வராமல் பாதுகாக்கிறது.

முள்ளங்கியை பயன்படுத்தி பசியைத்தூண்டும் மருத்துவம்

தேவையான பொருட்கள்:

 1. முள்ளங்கி
 2. சீரகம்
 3. மஞ்சள்

செய்முறை:

1 – முள்ளங்கியை சுத்தம் செய்து அதை விழுதாக அரைத்து கொள்ளவும்.

2 – ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

​3 – கொதிக்கும் அந்த நீரில் அரைத்த முள்ளங்கி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.

4 – அதனுடன் சீரகம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி குடித்து வர உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

முள்ளங்கியை பயன்படுத்தி மாதவிடாய் பிரச்னைகளுக்கு மருந்து.

தேவையான பொருட்கள்:

 1. முள்ளங்கி விதை
 2. கருஞ்சீரகம்
 3. பனங்கற்கண்டு

செய்முறை:

1 – முள்ளங்கி விதைப்பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர் விட்டு கொதிக்க விடவும்.

2 – அதை வடிகட்டி உணவுக்கு முன்பு இரு வேளை தொடர்ந்து குடித்துவர பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் சீராக்கி முறைப்படுத்தும்.

அல்சர்க்கான மருந்து

தேவையான பொருட்கள்:

 • முள்ளங்கி
 • கெட்டி தயிர்
 • உப்பு

செய்முறை:

1 – முள்ளங்கியை துருவி பிழிந்து சாறு எடுக்கவும்.

2 – 50 முதல் 100 மில்லி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

3 – இதனுடன் கெட்டி தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்துவர அல்சர், மூலம், வெள்ளை போக்கு பிரச்னைகள் சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *