பாகிஸ்தான் சூப்பர் லீக் மீண்டும் இன்று முதல் ஆரம்பம்…

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 போல பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. பிஎஸ்எல் போட்டியின் 5வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கி ஆனால் கொரோனா பீதியால் மார்ச் 13ம் தேதி முதல்  ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்குகளில் போட்டிகள் நடைபெற்றன.

கொரோனா பரவல் அதிகரித்ததால் பிஎஸ்எல் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, நவம்பர் மாதம் பிஎஸ்எல் பிளே ஆப், இறுதிப் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிபி கூறியது.

முதல் 4 இடங்களை பிடித்த

  1. கராச்சி கிங்ஸ்
  2. முல்தான் சுல்தான்ஸ்
  3. லாகூர் குவாலேண்டர்ஸ்
  4. பெஷாவர் ஜல்மி

ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

  • இன்று மாலை ‘குவாலிபயர்’  ஆட்டமும்,
  • இரவு ‘எலிமினேட்டர்-1’ ஆட்டமும்
  • நாளை இரவு ‘எலிமினேட்டர்-2’ ஆட்டம்
  • இறுதிப்போட்டி நவ.17ம் தேதி

இந்த போட்டிகள் அனைத்தும் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *