பேஸ்புக்கில் மெகா மோசடி! இருவர் கைது…

பிரபலமான ஐபிஎஸ் அதிகாரிகளான,

  1. ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜிபி சுனில் குமார்
  2. மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
  3. கூடுதல் டிஜிபி சந்திப் ரத்தோர்
  4. கூடுதல் கமிஷனர் தினகரன், ஐஜி சந்தோஷ்குமார்
  5. இணை கமிஷனர் பாலகிருஷ்ணன்
  6. மாதவரம் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து

இப் பெயர்களில் போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கி கொரோனா நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது உமோசடி கும்பலை சேர்ந்த ஷகீல்கான், ரவீந்தரகுமார் ஆகியோர் இந்த மோசடியை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் கடந்த வாரம் ராஜஸ்தான் சென்று ராஜஸ்தான் போலீசார் உதவியுடன் மோசடி கும்பலின் தலைவர் ஷகீல்கான் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த ரவீந்தரகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது பிரபலமான ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவர்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தது மட்டுமன்றி இவர்களின் முகநூல் நண்பர்களிடம் நன்கொடை என்ற பெயரில் பல கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *