தும்மல் வருதா இதை செய்யுங்க….
இல்லத்தில் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி உணவுப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான தும்மலை போக்கும் மருத்துவம்
- பாகற் இலை
- எலுமிச்சை இலை
- வேப்பிலை
- மஞ்சள்
- சாமந்தி பூ
- இஞ்சி
பாகற் இலை
- ஒரு கைப்பிடி அளவுக்கு பாகற் இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தவும்.
- பாகற் இலையில் நீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- இலைகளை வடிகட்டி தண்ணீரை தினமும் ஒருவேளை குடித்துவர தும்மல் கட்டுப்படும்
இது பல்வேறு நன்மைகளை கொண்டது. பாகற் கொடியின் காய், இலைகளில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஒவ்வாமை, தொற்று ஆகியவற்றால் வரும் தும்மலுக்கு மருந்தாகிறது. தலையில் நீரேற்றம், நெஞ்சக சளி போன்ற காரணங்களால் தும்மல் பிரச்னை ஏற்படுகிறது. தும்மலுக்கு சாமந்தி பூ மருந்தாகிறது. சாமந்தி பூவுடன், இஞ்சி சேர்த்து தேனீராக்கி குடிப்பதால், தும்மல் பிரச்னை சரியாகும்.
எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது வேப்பிலை எடுக்கவும்.
- இதனுடன் எலுமிச்சை இலை, சிறிது மஞ்சள் சேர்க்கவும்.
- பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதித்து வரும் நிலையில், ஆவி பிடிப்பதால் தலைநீரேற்றம் குறைந்து தும்மல் கட்டுப்படும்.
இது, நெஞ்சக சளியை கரைத்து தும்மல், இருமலை போக்குவதாக அமைகிறது.
விரலி மஞ்சள்
- தும்மல் பிரச்னை இருக்கும்போது, விரலி மஞ்சளை விளக்கின் நெருப்பில் காட்டும்போது வரும் புகையை நுகர்வதால் தும்மல் விலகும்.
இது, தலையில் நீரேற்றத்தை போக்கும் மருந்தாக விளங்குகிறது. அலர்ஜி, வைரஸ் தொற்றால் ஏற்படும் தும்மலை போக்குகிறது. எப்போது தும்மல் விலகிப்போகிறதோ அப்போது பல்வேறு நோய்களும் விலகி செல்கின்றன.
எனவே, இதுபோன்ற எளிய மருத்துவத்தை கொண்டு தும்மல் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.