துளசி டீ குடிச்சா… நோய் பறந்து போகும்…!!!

துளசி டீ குடிச்சா நோய் பறந்து போகும் னு சொல்லுவாங்க… அது உண்மை தாங்க. சொல்றே கேளுங்க….

பல நோய்களுக்கு இலகுவாக தீர்வை தரும் ‘மூலிகைகளின் ராணி’ நா அது நம்ப துளசி தாங்க. கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகள் ல ஏற்படுற பாதிப்பை சரி செய்ய துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். துளசி இலையை அப்படியே மென்று கூட சாப்பிடலாம். ஆனா நம்ப அத கூட செய்றோமில்ல… இப்போலாம் துளசியை எல்லாரு எப்படி பயன்படுத்துறாங்க பாருங்க.

துளசியை உலர வைத்து பவுடராக தயாரித்து வந்திருக்கும் கிரீன் டீ எங்கயுமே பிரதானமாக இருக்கு னு தா சொல்லனும்

துளசி டீ பற்றி சொல்லுறே கேளுங்க….

  • சுவாச கோளாறுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பருகலாம்.
  • இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்தும் துளசி டீ காக்கும்.
  • துளசி டீ நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
  • ஆய்வில் சொல்றாங்க… மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீ பங்களிப்பு வகிக்கிறது.

துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக எப்படி தயார் செய்யலாம்..?

  1. வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
  2. மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும்.
  3. அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
  4. இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *