பிக் பாஸ் சீசன் 3 – லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார்..

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தங்களின் குடும்பத்திற்காக கடந்த 10 ஆண்டுகள் தங்களை விட்டு பிரிந்து கனடாவில் பணிபுரிந்து வருவதாக கூறி தனது அப்பா மீது கொண்ட அன்பை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார் லாஸ்லியா. 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டில் வைத்து தனது அப்பாவை சந்தித்தார் லாஸ்லியா.

அப்போது அவரது அப்பாவை பார்த்து லாஸ்லியா கதறி அழுதது பெரும் வைரலானது. அந்தக் காட்சி இன்னமும் பலரது கண்களைவிட்டு மறையவில்லை.

இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பா திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தை இலங்கை ஊடகங்களும் உறுதி படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *