5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை…
கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பொறுப்பான பேட்டிங், ட்ரென்ட் போல்ட்டின் அசத்தலான பவுலிங் மற்றும் இளம் வீரர்களின் துடிப்பான அணுகுமுறை என எல்லாம் கை கொடுக்க பைனலில் எளிதாக டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் 5வது முறையாக மும்பை ஐபிஎல் கோப்பையை வென்று, புதிய சாதனையை படைத்துள்ளது.
‘இந்த தொடரில் எங்கள் அணியின் இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’என்று கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.