அதிகமான இருமல் வருதா? அப்ப வெற்றிலை சாப்பிட்டு பாருங்க!!

‘வெற்றிலை’ சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத்திறன் உள்ளது.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுடன் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சிறு குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயாமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ‘சி’ உள்ளது. வெற்றிலை சாப்பிடுவதால் வாய் நாற்றம் போக்கும்.

மேலும் வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *