ஓமம் தாங்க….. அஜீரணம், வயிற்று கோளாறுக்கு சரியான தீர்வு
ஓமம் மிகுந்த மணமுடையது. ஓமத்தில் விட்டமின் பி 1, 2, 3 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன இக் குணத்தையுடைய ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து காலையில் அருந்தினால் உடல் பலம்பெறும்.
வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கான தீர்வு 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் போதும். இதை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம்
ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.
ஓம எண்ணெயை தடவினால் மூட்டுவலி வறாது.
ஓமத்தைப் பொடி செய்து கொதித்த நீருடன் சேர்த்து பருகி வந்தால் இதயம் பலப்படும்.
ஓம எண்ணெயுடன் லவங்க எண்ணெயைச் சேர்த்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா வறாது.
தொப்பையை குறைக்க….
- இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்பூன் யும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்கு கரைத்து குடிக்க வேண்டும்.
- இதை 15 நாட்கள் செய்து வந்தால் உங்க தொப்பை காணாமலே போய்விடும்.