பிஞ்சு குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டும், தன்னை தானே வாளால் வெட்டி கொண்ட, தாய்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதிக்கு திருமணம் ஆகி ஒரு வயது மகளும் உண்டு.
இந்நிலையில், சுமதியின் தங்கை சுஜாதா பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் அக்கா சுமதி, தன்னுடைய ஒரு வயது மகள் ஸ்ரீநிதியுடன் அம்மா வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் 1 மணி இருக்கும். அப்போது திடீரென சுமதி தீயில் தீப்பற்றி எரிந்தார்.. வீட்டிற்குள் இருந்து உடம்பெல்லாம் பற்றிய நெருப்போடு அலறி கொண்டே வெளியே ஓடி வந்தார், இதனால் சத்தம் கேட்டு அங்கிருந்த சுஜாதாவும், அக்கம்பக்கத்தினரும் ஓடிச்சென்று பார்த்தால், குழந்தை ஸ்ரீநிதியும் தீயில் எரிந்து கொண்டு, அலறி துடித்து கொண்டிருப்பதை கண்டு பதறினர்.
உடனடியாக தாய், மகள் மீதிருந்த நெருப்பை அணைத்தனர். ஆம்புலன்ஸை வரவழைத்து, இருவரையும் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சுமதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.. குழந்தையும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இது தொடர்பாக வரஞ்சரம் போலீசில் உயிரிழந்த பெண்ணின் அப்பா புகார் தந்தார். அந்த புகாரில், சுமதிக்கு பேய் பிடித்துவிட்டது. அதனால்தான், தன்னைத்தானே கொடுவாளால் வெட்டிக் கொண்டும், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தும், பக்கத்தில் இருந்த குழந்தைக்கும் அதே மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொண்டார்” என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். உண்மையிலேயே சுமதிக்கு பேய் பிடித்துவிட்டதா என்று தெரியவில்லை.. அதேபோல, வீட்டில் சுஜாதா இருந்த நிலையில், அக்கா – தங்கைக்குள் ஏதாவது பிரச்சனையா? அதனால் இந்த விபரீதம் ஏற்பட்டதா என்ற ரீதியில் விசாரணை துரிதமாகி உள்ளது.