தவசிக்கு நிதியுதவி வழங்கிய சிம்பு.! பெரிய மனசு தாங்க…!!!
பிரபலமான நடிகரான தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
ஏற்கனவே தவசிக்கு சூரி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நிதியுதவி வழங்கிய நிலையில் தற்போது நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் வழங்கி உதவியுள்ளார்.
நடிகர் தவசி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது நீங்கள் அறிந்ததே….
பின்னர் திமுக எம்எல்ஏ-ஆன மருத்துவர் சர்வணன் திருப்பரங்குன்றத்திலுள்ள தனது மருத்துவமனையில் தவசியை அனுமதித்து சிகிச்சையும் அளித்து வருகிறார். மேலும் பல பிரபலங்களிடம் உங்களால் முடிந்த தொகையை வழங்குமாறு உதவியை நாடி வருகின்றார்.