அமலாபாலின் புகைபடங்களை வௌியிட தடை…!!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு… இனி முடிஞ்சா போடுங்கடா…

நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுகாலத்திலேயே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இருவருக்கும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது நமக்கு தெரியும். அது போல இயக்குனர் விஜய்க்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டதும் நமக்கு தெரிந்ததே….

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருடன் அமலாபாலுக்கு திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பவ்னிந்தர் சிங்கே பகிர்ந்தார். இவரது பகிர்வு சமூக வளைதளங்களில் பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது.

பாடகர் பவ்னிந்தர் சிங் பகிர்ந்த புகைப்படங்களுக்கு அமலா பால் மறுத்தார். மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு திருமணம் ஆகவில்லை தன்னுடன் எடுத்த புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் வெளியிட தடை விதிக்க கோரியும் அவதூறு வழக்கு தொடர்ந்தார் 

இந்த வழக்கின் விசாரணையில் சற்று முன்னர் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு நடிகை அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பவ்னிந்தர் சிங் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *