உலகின் அதிவேக காரான “புகாட்டி சீரானின்” சாதனையை முறியடித்த “SSC Tuatara” கார் முதலிடம்….
உலகின் அதிவேகமான கார் என்றாலே புகாட்டி சீரான் என்றே தெரியும். ஆனால் “புகாட்டி சீரானின்” சாதனையை முறியடித்த “SSC Tuatara” என்ற காரை வாஷிங்டன் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் SSC நார்த் அமெரிக்கா என்ற நிறுவனத்தின் 24 பேர் மட்டுமே கொண்ட குழுவினரே உருவாக்கியுள்ளனர்.
- ட்வின் டர்போ 5.9 லிட்டர் வி-8 எஞ்சினை கொண்டுள்ளது.
- அதிகபட்சமாக 1,750-hp பவரை வழங்குகிறது. அதனை இயக்க 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்
- இக்காரின் எடை 1,247 கிலோ
- இந்த கார், மணிக்கு 508.73 கிமீ வேகத்தில் சென்றது.
- இந்த காரின் விலை, 1.6 மில்லியன் அமெரிக்க டாலராகும். (இந்திய விலைப்படி 11.79 கோடியாகும்).
அதிவேகமான கார் என்பதால், அந்நிறுவனம் மொத்தமாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.