நேற்றைய போட்டியில் 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு 20% அபராதம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களுக்கு 375 ரன்களை பெற்றது. பின்னர் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களை எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களை வீசுவதற்கு 4 மணி 6 நிமிடங்களையும் எடுத்துக் கொண்டதால் இப் போட்டி இரவு 11.40 மணிக்குத் தான் முடிந்தது.  ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்கும் அதிகமான நேரத்தை பந்துவீச இந்திய அணியினர் எடுத்துக்கொண்டனர்.

இன்று வெளியிட்ட ஐசிசியின் அறிவிப்பில் “ இந்திய அணியினர் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், அவர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *