முருங்கை இலை டீ …!!! மாரடைப்பு வராமல் தடுக்க, கொழுப்பின் அளவைக் குறைக்க, மேலும்…

முருங்கை மரத்தின் காய், இலை, விதை, பட்டை, வேர், பிசின், மலர் அனைத்துமே மருந்தாக பயன்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்….

குறிப்பாக,

  1. முருங்கை இலைகளில் க்ளோரோஜெனிக் ஆசிட்டின் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  2. முருங்கை இலையில் உள்ள விட்டமின் சி நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
  3. முருங்கைக்கீரை உடலில் உள்ள ஊளைச்சதை, தொப்பையின் கொழுப்பை அளவைக் குறைக்க உதவுகிறது.
  4. இதய நோய்களின் ஆபத்தைக் குறைத்து இதய நோயாளிகளுக்கும் உதவுகிறது.
  5. மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.
  6. முருங்கை இலையை உணவில் சேர்த்து கொண்டால் சருமத்தையும் ஆழமாக சுத்தம்  செய்கிறது.
  7. முருங்கை டீ இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. 

முருங்கை டீ செய்முறை: 

  • முருங்கை இலையை நிழலிலேயே உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டினால் நல்ல பச்சை நிறத்தில் டீ கிடைக்கும்.
  • உங்களுக்குக் கூடுதல் சுவை தேவைப்பட்டால் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *