வெஜ் கட்லட் செய்வது எப்படி.?

தேவையான பொருட்கள்
  • கேரட் – 1
  • பீன்ஸ் – 3
  • உருளைக்கிழங்கு – 3
  • ரொட்டி (ப்ரெட்) – 6
  • மல்லித்தூள் – 1/2 மேஜைக்கரண்டி
  • கரம் மசாலா – 1/4 மேஜைக்கரண்டி
  • கடலை எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை
  1. முதலில் 3 உருளைக்கிழங்கு,1 கேரட் மற்றும் 3 பீன்ஸ் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதனை ஒரு குக்கரில் காய்கறிகள் மூழ்குற அளவில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  3. 10 நிமிடங்களுக்கு பிறகு கேஸை அணைத்து விட்டு வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி பின் வேக வைத்த காய்கறிகளை ஒரு பவுலில் வைத்து மசித்து வைக்க வேண்டும்.
  4. பின் 6 ரொட்டிகளை சிறுது சிறுதாக நறுக்கி மிக்ஸியில் வைத்து நன்றாக அரைத்து விட்டு அதனை இரு பாத்திரங்களிலாக ஒரு பாத்திரத்தில் கால் பங்கும் , மற்றொரு பாத்திரத்தில் முக்கால் பங்குமாக பிரித்து வைக்க வேண்டும்.
  5. அடுத்து மசித்துள்ள அந்த காய்கறியில் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,கரம் மசாலா, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு கலந்து வைக்க வேண்டும்.
  6. பொடியாக்கி வைத்துள்ள ரொட்டி மாவின் கால் பங்கை கலந்து நன்றாக பிசைந்து கையில் ஒட்டாத அளவிற்கு சற்று சப்பாத்தி மாவை போன்று திடமாக வைத்து கொள்ள வேண்டும்.
  7. பிசைந்து வைத்துள்ள இதனை ஒவ்வொரு சிறு உருண்டையாக ஒவ்வொரு பகுதியும் ஒரே மாதிரியாக இருக்கும் விதத்தில் உருட்டி,அதனை முக்கால் பங்காக எடுத்து வைத்துள்ள ரொட்டி மாவில் போட்டு எடுக்க வேண்டும்.
  8. பின் அடுப்பில் வைத்துள்ள எண்ணெயில் இந்த கட்லட்களை போட்டு இரு புறமும் பொன்னிறநிறமாக பொரிக்க வேண்டும்.

சுவையான வெஜ் கட்லட் ரெடி…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *