ஆப்பிள் மியூசிக் 5 மாத இலவச சந்தாவை பெற வழி….

ஆப்பிள் மியூசிக் ஆனது ஆப்பிள் போனில் உபயோகிக்கும் செயலி ஆகும். இச்செயலி மூலம் பாடல்களை கேட்டு மகிழலாம். ஆனால் அதற்கு மாதம் 49 ருபாய் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்தாமல் கேட்டால் ஆப்லைனில் பாடல்கள் கேட்பது மற்றும் பாடல்களை ஸ்கிப் (skip) செய்தால் விளம்பரம் வரும் போன்ற பல தொல்லைகள் இருக்கும்.

இந் நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் மியூசிக்கான 5 மாத இலவச சந்தாவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

செய்ய வேண்டியது…

  1. முதலில் உங்களின் iPhone, iPad or iPod-ல் ஷாசம் (Shazam) செயலியை பதிவிறக்கம் செய்யவும். செயலியை பதிவிறக்கியப் பின், ஏதாவது ஒரு பாடலை கண்டுபிடிக்கவும்.
  2. அந்த பாட்டின் பெயர், அந்த பாட்டை எழுதியவர், உள்ளிட்ட குறிப்புகள் தெரியும்.
  3. மேலும், அதனை கேட்கவும் வசதி இருக்கும். 
  4. அப்பொழுது நீங்கள் ஆப்பிள் மியூசிக் வழியாக கேட்பதை கேட்கும் வசதியை தேர்வு செய்யவேண்டும். அதன்பின் அந்த செயலிக்குள் செல்லும்.

பின்னர், நீங்கள் 5 மாத இலவச சந்தா சலுகையைக் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *