கொரோனா மட்டுமல்ல எந்தவொரு நோயிற்குமான உடலின் எதிர்ப்பு சக்தியை தரும் முருங்கைக் கீரை…
கொரோனா வைரஸ் நம் வாழ்க்கையையே மாற்றி வருகின்றது. இந் நோய் வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி அத்தியாவசியமாகிறது. கொரோனாவுக்கு பின்னரே முருங்கை மரமானது எவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு மருந்து என்பது உலகிற்கே தெரிய வந்துள்ளது.
பாலில் புரோட்டீன் சத்து மற்றும் கல்சியமும், கேரட்டில் வைட்டமின்-ஏ யும், வாழைப்பழத்தில் வைட்டமின் பி2 யும், வேர்க்கடலையில் வைட்டமின் பி3 யும் இருப்பது எல்லாம் நமக்கு தெரிந்ததே…
முருங்கைக் கீரையில்,
கேரட்டை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின்-ஏ யும், வாழைப்பழத்தை விட 50 மடங்கு அதிகமாக வைட்டமின்-பி2 வும், வேர்க்கடலையை விட 50 மடங்கு அதிகமாக வைட்டமின் பி3 யும், பாலிலை விட இரு மடங்கு அதிகமாக புரோட்டீனும், முட்டையில் உள்ளதை 5 மடங்கு மெக்னீசியம் சத்தும் இருக்கின்றது.
அதனால் தான் கொரோனா மட்டுமல்ல எந்தவொரு நோயிற்குமான உடலின் எதிர்ப்பு சக்தியை தரும் முருங்கைக் கீரை முதலிடம் வகிக்கின்றது. ,தனால் தான் அன்றே முன்னோர்கள் கூறினார் பழமொழி….
“முருங்கைக்காய் உண்டால் கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான்”