அடிக்கடி நெஞ்சில் சளி கட்டுகிறதா? அப்ப வீட்டிலே இந்த கசாயத்தை செய்து குடிங்க..!

இந்த மருத்துவ குணம் வாய்ந்த கசாயம் தீராத இருமல், நெஞ்சு சளி, காய்ச்சல், சுவாசப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

சித்தரத்தை – (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருள்)

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • அதில் சிறிய துண்டு அளவு சித்தரத்தையை நன்றாக நசுக்கி போட்டுக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்பு 10 மிளகுகளை தட்டிப் போட்டுக் கொள்ளுங்கள்.
  • பின்பு 10 துளசி இலை, 10 கற்பூரவள்ளி இலையையும் அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • இது கொஞ்சம் காரத் தன்மை கொண்டதால், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டு கொதிக்க விடுங்கள்.
  • மிதமான தீயில் அடுப்பை வைத்து விட்டு இந்த 2 டம்ளர் தண்ணீர், 1 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை சுண்ட விட வேண்டும்.
  • கடைசியாக இதை ஒரு டம்ளரில் வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போதே குடித்துவிடுங்கள்.
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த கசாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *