தலைமுடி உதிர்வு பிரச்சினையை தீர்க்க வெங்காய ஹேர்பேக்
முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும், வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியை வெங்காயம் சீர்செய்கிறது.
வெங்காய ஹேர்பேக்கை எப்படி செய்வதென்று இப்பொழுது பார்ப்போம்.
தேவையான பொருட்கள் –
வெங்காயம் – 2
மயோனைஸ்- 3 ஸ்பூன்
தயிர் – 5 ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
- இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.