சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புக்களும் அதற்கான தீர்வுகளும்..

சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தால், இதன் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மனிதனின் வயிற்றுப் பகுதியின் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்திலிருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதை சர்க்கரை நோய் என்கிறோம். அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், சோர்வு, அடிக்கடி பசி மற்றும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு  பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், அடிபட்டால் விரைவில் ஆறாத புண்  போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வர வேண்டியது அவசியம்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளையும், புரோட்டின் உணவுகளையும், கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளையும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய்க்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்தல், உடற்பயிற்சி செய்தல், எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். இது உங்களது உடல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *