தர்பூசணியில் காணப்படும் நன்மைகள்..!

  • தர்பூசணியில் வைட்டமின், கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
  • வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்க தர்பூசணி சிறந்தது.
  • கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.
  • ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரலாம். 
  • நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். 
  • தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இது தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது.
  • உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில்  தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. 
  • வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *