கண் கோளாறுகள் அனைத்தையும் போக்கும் மூலிகைகள்…

கண்கள் உடலில் மிக முக்கியமான உறுப்பு. ஆயுள் முழுமைக்கும் கண் பார்வை வலுவாக இருக்கவும் கண்கள் பாதிக்காமல் இருக்கவும் முறையான பராமரிப்பு அவசியம்.

​மங்கலான கண் பார்வைக்கு சம்பங்கிபூ

கண் பார்வை மங்கலாக இருப்பவர்களு இந்த பூ உதவும்.

சம்பங்கி மரத்தின் இளந்தளிரை நன்றாக ஓடும் நீரில் அலசி பிறகு கசக்கினால் சாறு கிடைக்கும். சாறை பிழிந்து சுத்தமான பாத்திரத்தில் விட்டு அதே அளவு பன்னீர் கலந்து நன்றாக கலக்கவும்.

இதை காலையும் மாலையும் கண்களில் இரண்டு துளி விட்டு வந்தால் மங்கலான பார்வை தெளிவடைந்து கண்கள் பளிச்சிடும். கண்கள் குளுமை அடையும்.

​கண் பார்வைக்கு ஜாதிக்காய்

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஜாதிக்காயை நன்றாக கழுவி அம்மியில் இடித்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து மை போல் அரைத்தெடுக்கவும்.

இதை இரவு தூங்கும் போது கண்களை சுற்றி பற்று போல் போட்டு கொள்ள வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் காட்டனை நனைத்து கண்களை துடைத்து கண்கள் கழுவ வேண்டும்.

இதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதை செய்து வந்தால் கண் உஷ்ணத்தால் வரும் கண் கட்டி வராது. கண் குளிர்ச்சியாக இருப்பதோடு கண் பார்வை கூர்மை பெறும்.

கண் கட்டிக்கு திருநீற்றுப்பச்சிலை

கண் உஷ்ணத்தால் அடிக்கடி கண்களில் கட்டி வருபவர்களுக்கு இது சிறந்த பலனாகும். இந்த இலையை நீரில் அலசி இடித்து பிழிந்தால் சாறு கிடைக்கும்.

இந்த சாறை கண் கட்டிகள் மேல் பூசி வர வேண்டும். சாறு உலர உலர சுத்தமான வெள்ளைத்துணியில் துடைத்து மீண்டும் மீண்டும் பற்று போல் கட்டி மீது போட வேண்டும். இதனால் கட்டி பழுத்து உடையும் அல்லது கிருமிகள் வெளியேற்றப்பட்டு உள்ளே அமுங்கவும் செய்யும்.

கட்டி உடைந்து சீழ், இரத்தம் வெளியேறினாலும் அதை சுத்தம் செய்து மீண்டும் இந்த சாறு பற்று போல் போட்டால் விரைவில் பலன் கிடைக்கும். மீண்டும் கட்டி வரும் போது ஆரம்பத்திலேயே போட்டு விட்டால் கட்டி வராது. படிப்படியாக கண் உஷ்ணம் குறைந்து கட்டிகள் வராமல் செய்யும்.

​கண் நோய்க்கு நந்தியாவட்டை

கண் பார்வை கூர்மையடைய, கண் உஷ்ணம் குறைய, கண் சிவப்பு மறைய, கண் வீக்கம் வற்ற என எல்லாவிதமான கோளாறுகளுக்கும் இது சிறந்த வைத்தியம்.

சுத்தமான டம்ளரில் குளிர்ந்த நீர் விட்டு அதில் இரண்டு பூக்களை சுத்தம் செய்து போடவும். 15 நிமிடங்கள் கழிந்ததும் பூவை எடுத்து அதில் இருக்கும் நீரை கண்களில் ஒரு துளி விடவும். இது கண் நோயை குணப்படுத்துவதோடு கண்களை சுத்தம் செய்யும். கண் சிவப்பை மறைத்து பார்வைத்திறனை வலுப்படுத்தும்.

​கண் குளுமைக்கு நந்தியாவட்டை

இது கண்கள் உஷ்ணத்தை தணிப்பதோடு பார்வைத்திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். இந்த இலைகளை சுத்தம் செய்து சாறு பிழிந்து விடவும்.

இதனுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி எண்ணெய் குளியலின் போது தலைக்கும் கண்களில் விட்டும் பயன்படுத்தலாம். இதனால் கண்பார்வை கூர்மையடையும். கண்கள் வலுப்பெறும்.

​கண் எரிச்சலுக்கு நெய்ச்சட்டிக்கீரை

இதை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். கண் எரிச்சல் இருக்கும் போது இந்த கீரையை இடித்து சாறு எடுத்து தாய்ப்பாலில் கலக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *