20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி.

பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்காவுக்கு இடையில் நடைப்பெற்ற தொடரில், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. முதலாவது 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்றிரவு நடைப்பெற்றதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் 104 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார். கேப்டன் பாபர் அசாம் டக்-அவுட் ஆனார்.
பின்னர் 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் ஜானிமேன் மலான் (44 ரன்), ரீஜா ஹென்ரிக்ஸ் (54 ரன்) சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த போதிலும் மிடில் வரிசை வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது.

பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பஹீம் அஷ்ரப் வீசினார். முதல் 5 பந்தில் 13 ரன் திரட்டிய தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. இறுதிப்பந்தை எதிர்கொண்ட பார்ச்சுன் 2 ரன் மட்டுமே எடுத்தார். 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணியால் 6 விக்கெட்டுக்கு 166 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *