ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றிலேயே சோபியா கெனின் வௌியேற்றம்.

ஆஸ்திரேலியா ஓபன் கிராண் ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின்  மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் சோபியா கெனின்(22)  2வது சுற்றிலேயே தோற்று வெளியேறி உள்ளார். இரண்டாவது சுற்றில் நேற்று  எஸ்டோனியா வீராங்கனையும், கயா கனேபி(35) உடன் சோபியா மோதினார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய கயாவின் சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல்  சோபியா திணறினார், அதனால்  நடப்பு சாம்பியன் சோபியா 0-2 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில்  ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), ஜெனிபர் பிராடி(அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா(செக் குடியரசு), பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து), டோனா வேகிக்(குரேஷியா) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர். அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆந்த்ரே ரூபலேவ்(ரஷ்யா),  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோர் நேற்று 3வது சுற்றில் நுழைந்தனர்.

இந்தியர்கள் தோல்வி:  இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் திவிஜ் சரண், ஸ்லோவாக்கிய வீரர் இகோர் ஜெலேனய் ஜோடி, ெஜர்மனியின்  கெவின் கிரவிட்ஸ், யான்னிக் ஹன்ப்மன் ஜோடியுடன் நேற்று மோதியது.

அதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ருமேனியாவின் மிஹேலா பஸர்நேஸ்கு ஜோடி   ஆஸ்திரேலியாவின் ஒலிவியா கடெக்கி, பெலிண்டா உல்காக் ஜோடியை நேற்று எதிர்கொண்டது.  அதில் ஆஸ்திரேலியா இணை அதிரடியாக விளையாடி எளிதாக வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *