கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
தனுஷின் 41-வது படமான ‘கர்ணன்’ திரைப்படத்தை ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர்.
அதன் படி தற்போது கர்ணன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கும் ரீலிஸ் தேதியும் வெளியாகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தலை, மற்றும் கைகளில் ரத்தம் வழிய கைவிலங்குடன் கோபத்துடன் நிற்கிறார். போஸ்டரில், ”நீதியின் ஆன்மா மரணம் எய்தாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரையரங்குகளில் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.