அய்யோ! இது தெரியாம இத்தனை நாளாக பூண்டு தோலை வீணா குப்பையில் போடடோமே!

இயற்கையான முறையிலான நம்மை ஃபிரஷ்ஷாக வைத்துக் கொள்ள இது ஒரு நல்ல டிப்ஸ்

ட்ரை பண்ணி தான் பாருங்களே!

 பூண்டில் பல வகை உள்ளன.

  • ஒற்றை பல் பூண்டு
  • தரை பூண்டு
  • சைனா பூண்டு
  • மலை பூண்டு
  • நாட்டுப் பூண்டு

இதில் ஒற்றைப் பல் பூண்டுக்குஅதிகப்படியான சத்துக்கள் உண்டு. இந்த ஒற்றைப் பல் பூண்டை சமையலில் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி இருமல் நீங்க, புற்றுநோய் வராமல் தடுக்க, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த பூண்டிற்கு முதல் இடம் என்று சொன்னால் போதாது.

பூண்டு தோலில் என்ன ரகசியம் தான் மறைந்திருக்கு என்று பார்போம் வாங்க…

  • பூண்டை பயன்படுத்தினால் அந்த தோலை உரித்து இனி குப்பை தொட்டியில் போடக்கூடாது
  • ஒரு அகலமான பாத்திரத்தில், பூண்டு தோலை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்து வாருங்கள். பூண்டு தோலில் கட்டாயமாக ஈரப்பதம் இருப்பதால் சேகரித்து வைக்கும் பாத்திரத்தை மூடாது அப்படியே அது காற்றோட்டமாக 2 நாட்கள் ஆற வேண்டும்.
  • அதன் பின் சேகரித்த பூண்டு தோலை எல்லாம் ஒரு துணிப்பையில் போட்டு மூட்டையாக, தலையணை போல் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். முடிச்சுப்போட்டு தலையணை போல துணியிலான பையில் செய்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் வேண்டாம்.

பயன்கள்

தினம் தோறும் நாம் தலைக்கு வைத்து உறங்கினால் நமக்கு வரக்கூடிய தலைவலி, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும்.

நிச்சயமாக காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது, சாதாரணமாக தூங்கி கண்விழிப்பதற்கும், பூண்டு தலையில் தூங்கி விழிப்பதற்க்கும் நிச்சயமாக வித்தியாசத்தை உணர முடியும்.

இவற்றினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *