பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணி கொடுக்கிற அந்தக் காசை செலவழிக்கக் கூடாது…
நல்ல விசேஷங்களுக்கு உங்களை வீட்டுப் பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்து உங்களுக்காக பணம் தருவது வழக்கம்.
நாம் அதை என்ன செய்கின்றோம்? என்று பார்த்தால் செலவு செய்கின்றோம் சரி, ஆனால் அந்த பணத்தை எப்படி பட்ட தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே கூறப்போகிறேன்…
தொழில் முடக்கம், பணம் முடக்கம் இருந்தால் சனிபகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் அதை சரி செய்வதற்கு இந்த பரிகாரம் கைகொடுக்கும்.
நம்மில் வரக் கூடிய விசேஷ தினங்களில் நிச்சயமாக உங்கள் கைக்கு பணம் வரக்கூடும். அவ்வாறு ஆசீர்வாதமாக பெறக்கூடிய எல்லா பணத்தையெல்லாம் முதலில் உங்களுக்கு சேகரித்து வைக்கும் பழக்கம் வரவேண்டும். அதன்பின் வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை சுக்கிர ஹோரை வரும்போது செய்வது மேலும் சிறப்பானது.
வெள்ளிக்கிழமை ஒரே ஒரு வெற்றிலையை வாங்கி அதன் மேலே நெய்யை தடவி வெற்றிலையைச் சுருட்டி, நூல் போட்டு கட்டி, பணம் சேகரித்து வைத்திருக்கும் டப்பாவில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். மறுநாள் காலை அந்த வெற்றிலையை எடுத்து கால் படாதவாறு அகற்றி விடவேண்டும். வெற்றிலையை அதே டப்பாவில் மட்டும் வாட விட்டுவிடாதீர்கள்.
சனி பகவானின் அம்சம் பொருந்திய பெரியவர்கள் கையிலிருந்து பணத்தை பெற்று, சுக்கிர ஓரையில் வெற்றிலையை வைத்து, பரிகாரத்தை செய்வதன் மூலம் சனியும் சுக்கிர பகவானும் இணைவதன் மூலம், நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு, பணக்கஷ்டம் தீர்வதற்கும் நிறையவே வாய்ப்பு உள்ளது.
இந்த பணத்தை சேமித்து வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்கள் வாங்கலாம். அப்படி இல்லை என்றால், உங்கள் வீட்டில் பூஜைக்கு தேவையான வெள்ளி பாத்திரங்களை வாங்குவது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
முக்கிய குறிப்பு
- பெரியவர்களிடமிருந்து ஆசீர்வாதமாக பெற்ற பணத்தை உங்கள் கையாலேயே, உங்களுடைய கடனை அடைப்பதற்காக, அடுத்தவர்களிடம் அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்து விடாதீர்கள். உங்களுக்காக கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை, நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுத்தது போல ஆகிவிடும்.