உலர்பழங்களில் உள்ள நன்மைகள்!

  • உலர் பழங்களில் கலோரிகள் அதிகம், ஆகையால் இது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
  • இதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் நிறைய உள்ளன.
  • உலர் பழங்கள் வெகு  எளிதில் செரிமானமாகக் கூடியவை மேலும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
  • பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான  ஆரோக்கியத்தை அடையலாம். 
  • உலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
  • உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும்.
  • உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை காக்கக்கூடியவை, மலச்சிக்கலை போக்க வல்லது, நினைவாற்றலையும் பெருக்கும், இதயத்திற்கும் நல்லது.  
  • உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர்  பழங்களை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *