இனி சரி சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது என்பதை தெரிஞ்சு கொள்ளுங்க…
பொதுவாக நாமெல்லாம் இப்பவும் கூட சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால்,
இந்த பழக்கம் நல்லதா? கெட்டதா? என்று பார்த்தால் அது முற்றிலும் தவறானதே…!!!
ஆய்வாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால்….
- சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் பசி எடுக்காது.
- சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்து விடும்.
- சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கின்றனர்.
பொதுவாக ஒரு நாளைக்கு கண்டிப்பாக 2 லிட்டர் தண்ணீர் ஒரு மனிதன் குடிக்க வேண்டும். சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்து விடும் என்பது உண்மை என்பதால் பின் வசதிக்கேற்றவாறு தண்ணீர் அருந்த பழகிக் கொள்ள வேண்டும்.
அதே போல் உணவு உண்ணும் போதும் இடை இடையே தண்ணீர் குடிப்பது ஆபத்தானது என தெரிவிக்கின்றனர். தண்ணீரை பருகும் போது தொண்டை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
சாப்பிட்டு முடித்த பின் 30 நிமிடம் கழித்து தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது. அவ்வாறு செய்யும் போது தொண்டை மற்றும் உணவுக் குழாயில் இடுக்குகளில் இருக்கும் உணவு துகள்கள் செரிமான பையை சென்று விடுகிறது.