அருகம்புல்லின் அற்புதங்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றினைக் குடித்து வர, எல்லா நோய்களும் குணமாகும்.

 1. அருகம்புல்லில் ஏராளமான பச்சையம் நிறைந்துள்ளதால், அருகம்புல் சாறில் பல இயற்கை மருத்துவம் நிறைந்து காணப்படுகின்றது.
 2. அருகம்புல் காரத்தன்மை உடையது.
 3. அருகம்புல் உயிர்ச் சத்துகளும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன, இது தளர்ச்சியை நீக்கி, உடலுக்கு வலிமையைத் தரவல்லது.
 4. அருகம்புல் உடலில் சேரும் நச்சுத்தன்மைகளை நீக்கி, ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைச் சமப்படுத்தி, குடற்புண்ணைக் (அல்சர்) குணப்படுத்துகிறது.
 5. மேலும் ரத்தத்தைப் பெருக்கி, ரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
 6. ரத்த வெள்ளை அணுக்களைத் தூண்டி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
 7. இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிகிறது.
 8. கல்லீரலில் கற்கள் உண்டாவதைத் தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
 9. பல் ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தடுத்து, பற்களை உறுதிப்படுத்துகிறது.
 10. பற்களை வெண்மையாக்குவதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.
 11. நச்சுப் பொருள்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.
 12. இதில் ‘இன்சுலின்’ நிறைந்துள்ளதால், நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
 13. நாளமில்லாச் சுரப்பிகளைச் சீர்படுத்துவதால், ‘ஆஸ்துமா’ நோயிலிருந்து விடுதலை அளிக்கிறது.
 14. அதிகப்படியான உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்குகிறது.
 15. மலச்சிக்கலை நீக்கி, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
 16. தோல் நோய்க்கும், சேற்றுப்புண்ணுக்கும் அரிய மருந்து இந்த அருகம்புல். எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *