ஆரோக்கியமூட்டும் நெய்!
நெய்யில் அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் கலந்திருக்கின்றன. இவை மூளை, இதயம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
நெய் குடல், எலும்புகள், முடி, சருமம் மற்றும் மூட்டுகள் என உடலின் பல்வேறு பாகங்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்தக்கூடியவை. உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்”
பசு நெய்
- இது ரத்த அணுக்களில் கால்சியம் படிவதை தடுக்க உதவும்.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும் தன்மை கொண்டது.
- நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராடும் வலிமையை அதிகப்படுத்தும்.
எருமை நெய்
- எருமை நெய்யில் வைட்டமின்-ஏ நிறைந்திருப்பதால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
- இந்த நெய்யில் ஆன்டி ஆக்சிடென்டுகள் வடிவில் கரோட்டினாய்டுகள் உள்ளன.
- எருமை நெய் உட்கொள்வதன் மூலம் மாஸ்குலர் சிதைவு மற்றும் கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.