எள்ளினால் கிடைக்கும் நன்மைகள்…
இதில் இருக்கும் எண்ணெயினால் தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மை நீங்குவதோடு தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புக்கள் நீங்கி பளபளப்புத்தன்மை அதிகமாகும்.
எள்ளினை அதிகம் உட்கொள்வதால் உடலின் எலும்புகள் வலிமையாகும்.
எள்ளில் செம்பு அதிகம் உள்ளதால் ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடையும்.
தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டால் உடலிலுள்ள சக்தி அதிகரிக்கப்பதோடு மூளை மற்றும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும்.