சருமத்தை இயற்கையான வழியில் பராமரிக்கும் முறைகள்…

பெண்கள் இயற்கை வழியில் தங்கள் சருமத்தை பராமரிக்க விரும்புகின்றனர். இதில் வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகையாகும்.

வேப்பிலையை பொடியாக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து அதை சருமத்தில் தேய்த்தால் தோல் பளபளப்பாகும்.

இயற்கையாக தோலில் பளபளப்பை ஏற்படுத்தவும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் அவகாடோ பழம் பயன்படுகிறது.

இதில் அதிகளவான புரதச்சத்து இருப்பதால் தோலில் ஏற்படும் சேதங்களை குணமாக்கும்.

சந்தனம் மிகச்சிறந்த மூலிகையாக விளங்குகிறது. இது மருந்துகளில் மட்டுமல்லாது தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் மூலப்பொருளாக விளங்குகிறது. இது தோலிலுள்ள முகப்பருக்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *