கிருஷ்ணர் நரகாசுரனை கொண்றதால் தீபாவளி கொண்டாடப்படவில்லை… உண்மை புராணக்கதை இது தான் …

கிருஷ்ணர் நரகாசுரனை கொண்றதால் தீபாவளி கொண்டாடப்படவில்லை. கிருஷ்ணர்நரகாசுரனை வதம் செய்வதற்குமுன்ன்ர் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளி என்றால் தீப ஒளி அல்லது தீபா அவளி என்று கூறுவார்கள். அவளி என்றால் வரிசை என்பதாகும். (தீபங்களை வரிசையாக அடுக்குவது)

கந்த புராணத்திலேயே பேசப்பட்ட முக்கிய விரதநாள் “தீபாவளி” ஆகும். இப் புராணங்களில் எல்லாம் முதலில் இருக்கும் கந்தபுராணம். யுகங்களைக் கணக்கு செய்யும் போது கிர்த யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உண்டு.

இக் கந்த புராணத்திலேயே, தீபாவளி பண்டிகை வருகின்றது. சிவ பெருமானுக்கு உரிய அஷ்ட விரதங்களில் கேதார கெளரி விரதம் என்று போற்றப்படுகிறது. கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாட்களுடன் கேதார கெளரி விரதம் முடிவுற்றது. இந்த தினத்தில் தான் சிவ பெருமான், சக்தியை தன்னில் ஒருபாதியாக ஏற்று, ‘அர்த்தநாரீசுவரர்’ என்ற உருவத்தை எடுத்தார். மற்றும் துவாபர யுகத்தில் இந்த தினத்தில் தான் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்று மக்களைக் காத்தார். அதனை நாம் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகின்றோம் என கேட்டுள்ளோம்.

#உண்மை இது அல்ல…

  • ஒரு அரக்கனை கொன்ற நாள் தீபாவளியாக கொண்டாடினால், நாம் பல நாட்கள் தீபாவளி கொண்டாட வேண்டி வரும்.

#தெரிந்துக் கொள்ள வேண்டியது….

  1. இராமன் 14 வருடம் வன வாசம் முடித்து மீண்டும் நாடு திரும்பியதை மக்கள் கோலாகலமாக கொண்டாடியதாகவும், அது தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் கதைகள் உண்டு.
  2. சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலின் பணிகள் 1577ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் இந்த தினத்தில் தான் தொடங்கப்பட்டது. அதனால் இந்த தினத்தை சீக்கியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
  3. மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை சமண மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படி பல்வேறு வித காரணங்களுக்காக தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

#இது தாங்க உண்மை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *