விளையாடி கொண்டிருந்த சிறுவன் காணாமற் போன மாயம்…

குன்னூரை சேர்ந்தவர் தேவேந்திரன், புவனேஸ்வரி தம்பதியின் மகன் ஹாரீசன். உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தேவேந்திரன் தமது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் கல்லாத்துக்கோம்பை கிராமத்துக்கு கடந்த வாரம் வந்தார்.

காலை ஹாரீசன் கல்லாத்து கோம்பையில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மகனுக்கு மதியம் சாப்பாடு ஊட்டுவதற்காக அவனை அழைத்து வர சென்ற புவனேஸ்வரி மகனை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

தேடியும் ஹாரிசன் கிடைக்காததால், பொலிஸில் பகார் செய்துள்ளனர். பொலிஸ் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *