எனக்கும் இப்புடி தான் பல்லு வலியோட TRIP க்கு போயி TRIP நாசமா போச்சி.. இது முன்னாடி தெரியாமே போச்சே..

இல்லத்தில் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பயன்படுத்தலாம். அந்தவகையில், பற்கள், நரம்புகளுக்கு பலம் தரக்கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் தன்மை கொண்டது ஈச்சமரம். இம்மரம் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது.

இந்த மரத்தின் பழங்கள் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை அழிக்கிறது.

ஈச்சங் காய்களை பயன்படுத்தி ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

 • ஈச்சங்காயை நசுக்கி எடுத்து, இதனுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து இதை வடிகட்டி வாய் கொப்பளித்துவர பற்களில் ஏற்படும் ஆட்டம், ஈறுகள் வீக்கம், ரத்தகசிவு சரியாகும் மேலும் பற்களுக்கு பலம் தருகிறது.

பல் சிதைவு தடுக்கப்படும்.

ரத்தத்தை உறைய வைக்கும்.

ஈச்ச மரத்தின் வேர்களை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

 • ஈச்சமர வேர்
 • பனங்கற்கண்டு
 • பால்

செய்முறை:

 1. ஈச்சமர வேர்களை துண்டுகளாக்கி சுத்தப்படுத்தி எடுக்கவும்.
 2. இதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
 3. வடிகட்டி இதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும்.
 4. இரவு தூங்கப்போகும் முன்பு இதை குடித்துவர நரம்புகள் பலப்படும்.

ஈச்சரமர வேர் நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடியது.

கை, கால்களில் ஏற்படும் நடுக்கத்தை போக்கும் தன்மை கொண்டது. 

ஈச்ச மரத்தின் குருத்தை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு, பால்வினை நோய்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

 • ஈச்சங்குருத்து
 • பனங்கற்கண்டு
 • பால்

செய்முறை:

 1. ஈச்சங்குருத்தை நசுக்கி எடுக்கவும்.
 2. இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
 3. பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும்.
 4. இதை காலை, மாலை என இருவேளையும் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.

கருப்பையை பலப்படுத்தும்.

கருப்பை நோய்களை விரட்டும்.

சிறுநீர் தாரையை சீர்படுத்தும்.

பால்வினை நோய்கள் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *