பச்சடிய இப்புடியும் சமைக்கலாமா? புதுசா இருக்கே…ருசியான மற்றும் ஆரேக்கியமான பச்சடி!! இதோ……

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்த்துண்டுகள் – 1 கப்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி கரைத்தது – 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை

01 – ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும்.

02 – அதில் கடுகைச் சேர்த்து, கடுகு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்.

03 – பின் நெல்லிக்காய்த்துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.

04 – கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

05 – மிளகாய்த்தூள், புளி கரைத்தது ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

06 – நெல்லிக்காய் நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

07 – எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *