சரியா நம்ம ஒதுக்குற பழத்துலயே அவ்ளோ நல்லதையும் வைக்கிறது… என்ன படைப்புடா சாமி…

சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. சீத்தாப்பழத்தை அனைத்து தரப்பு வயதினரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் உண்ணலாம்.

சீத்தாப்பழத்தில் உள்ள ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆஸ்துமா மற்றும் சளி போன்ற பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் தசைப்பகுதிகளை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள மிகவும் உறுதுணையாக செயல்படுகிறது.

சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

உடலில் ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்த சீத்தாப்பழம் தலைசிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், இப்பழத்தின் இலைகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.

சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின்-ஏ தலைமுடியையும், சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

சீத்தாப்பழத்தை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வர, சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமாக அமையும்.

சீத்தாப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் குறைபாட்டைச் சரி செய்து, வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இந்தக் கனி பயன்படுகிறது.

சீத்தாப்பழத்தின் சதைப்பகுதியைத் தேனில் ஊற வைத்து, தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவர்கள் தினமும் சாப்பிடலாம். அதிகமாக உட்கொண்டால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *