பூஞ்சை காளான்கள், நுண்கிருமி, வயிற்று புழு, அம்மை நோய்களுக்கு அருமையான மருந்து.. தெரிஞ்சி கொள்ளுங்க.. இல்லனா உங்களுக்கு தான் நஷ்டம்!!

வேப்பிலை

  • பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது வேப்பிலை.
  • இது, வயிற்று புழுக்களை வெளித்தள்ளும்.
  • வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது.
  • உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.
  • அம்மை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது.

வேப்பம் பூ

வேப்பம் பூ உடல் தளர்ச்சியை போக்கும்.

வேப்பம் பூவை கொண்டு உடல் தளர்ச்சியை போக்கும் மருந்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்

அரை ஸ்பூன் அளவுக்கு காய வைத்த வேப்பம் பூ எடுக்கவும். இதனுடன் வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர வேண்டும்.

இதை குடித்து வருவதால்..

  • உடலில் ஏற்படும் தளர்ச்சி நீங்கும்.
  • உடல் பலம் பெறும்.
  • கல்லீரலை பலப்படுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.
  • ஆயுளை அதிகரிக்கும்.
  • நோய்களை நீக்கும்.
  • வேப்பிலை புத்தியை தெளிவுபடுத்த கூடியது.
  • புண்களை விரைவில் ஆற்றும்.
  • பித்தம், வாதத்தால் ஏற்படும் நோயை போக்கும்.
  • உயிரணு குறைபாடுகளை சரிசெய்யும்.

வேப்பங்கொழுந்தை பயன்படுத்தி அம்மைநோய்க்கான உள் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. வேப்பங்கொழுந்து
  2. அதிமதுரப்பொடி

செய்முறை:

2 பங்கு அரைத்த வேப்பங்கொழுந்து பசை, ஒரு பங்கு அதிமதுரப்பொடி சேர்த்து கலந்து சுண்டைகாய் அளவு உருண்டைகளாக உருட்டி காய வைத்து, காலை, மாலை என 3 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • அம்மை கொப்புளங்கள் குணமாகும்.
  • காய்ச்சல் விலகி போகும்.

வேப்பிலையை கொண்டு அம்மை நோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. வேப்பிலை
  2. மஞ்சள் பொடி
  3. வசம்பு பொடி

செய்முறை:

அரைத்து வைத்திருக்கும் வேப்பிலை பசையுடன், மஞ்சள் பொடி, வசம்பு பொடி சேர்த்து கலந்து அம்மை கொப்புளங்கள் மீது பற்றாக போட்டு சிறிது நேரத்துக்கு பின் குளித்துவர அம்மை கொப்புளங்கள் சரியாகும்.

  • எரிச்சல் இல்லாமல் போகும்.
  • வடு மறையும்.
  • வேப்பிலையை வீட்டின் முற்றத்தில் வைப்பதால், அது நோய் கிருமிகளை தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *